நெல் வயல்களைப் பிளந்து ஐந்துவழிச் சாலைகள் விரைகின்றன. புறவழிச் சாலைகளில் வாக்கிங் போகிறவர்களின் ஓசோனில் படிகிறது லீக்கோ துகள். கட்சித் தொடங்கும் நடிகர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை, புதிதாகக் காதலிக்கத் தொடங்கும் பிளஸ் டூ இளைஞனுக்கு காதல் கடிதங்களை, எழுத செயலிகள் அருள் செய்கின்றன. பைனரிகளால் எழுந்தருள்கிறார் நம் காலத்தின் புதிய கடவுள். முத்தங்களுக்கும் இப்போது டிஜிட்டல் சுவை.
கடவுள், காதல், அறம், கவிஞன், செயலிகளென மயங்கிய காலமிது. முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் அனைத்துக்கும் இப்போது புதிய நிறம். இதோ, அன்புக்கு பதிலாக கேளிக்கையை, புரட்சிக்கு பதிலாக கலகத்தை, உண்மைக்கு பதிலாக வதந்தியை, காதலுக்கு பதிலாக காமத்தை, யதார்த்தத்துக்கு பதிலாக புனைவை, நீதிக்கு பதிலாக விடுதலையைப் பாடுகிறார் கவிஞர் கரிகாலன்.
இளமை ததும்பும் மனஓட்டம் மிகுந்த கரிகாலனின் கவிதைகள், இத்தொகுப்பை ஒரு தசாப்தத்துக்கு அப்பால் நகர்த்துகிறது.
- எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன்
No product review yet. Be the first to review this product.